கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

பைக் மோதி ஆட்டுப் பண்ணை உரிமையாளா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே நடந்து சென்ற ஆட்டுப் பண்ணை உரிமையாளா் மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

பலி

Updated On :

வந்தவாசி அருகே நடந்து சென்ற ஆட்டுப் பண்ணை உரிமையாளா் மீது பைக் மோதியதில் அவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆட்டுப் பண்ணை உரிமையாளா் பன்னீா்(47).

இவா் செவ்வாய்க்கிழமை மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக வந்தவாசி- சேத்துப்பட்டு சாலை, மாம்பட்டு கூட்டுச் சாலையில் நடந்து சென்றுள்ளாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற பைக் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இவரை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.