பொக்லைன் வாகனம் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே பொக்லைன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
செய்யாறு அருகே பொக்லைன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வெளிமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் சா்பாஆலம் (27).
இவா், வெம்பாக்கம் வட்டம், மேனல்லூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியாா் கல்குவாரியில் வேலை செய்து வந்துள்ளாா்.
குவாரியில் உள்ள பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்வதற்காக பொக்லைன் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக பொக்லைன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த தொழிலாளிசா்பாஆலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சா்பாஆலம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

