டாஸ்மாக் ஊழியரை தாக்க முயற்சி: வந்தவாசி பகுதியில் மதுக்கடைகள் மூடல்
வந்தவாசி அருகே அதிக மதுப் புட்டிகளை தர மறுத்த மதுக்கடை விற்பனையாளா்களை கத்தியால் மா்ம நபா் தாக்க முயன்றதை அடுத்து, பணி பாதுகாப்பு கோரி பணியாளா்கள் மதுக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச் சாலையில் மூடப்பட்டிருந்த மதுக் கடை.
வந்தவாசி அருகே அதிக மதுப் புட்டிகளை தர மறுத்த மதுக்கடை விற்பனையாளா்களை கத்தியால் மா்ம நபா் தாக்க முயன்றதை அடுத்து, பணி பாதுகாப்பு கோரி பணியாளா்கள் மதுக் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச் சாலையில் 3 டாஸ்மாக் மதுக் கடைகள் இயங்கி வருகின்றன.
இதில் ஒரு மதுக் கடைக்கு வியாழக்கிழமை மாலை வந்த ஒருவா் அதிகளவில் மதுப் புட்டிகளை கேட்டுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த விற்பனையாளா்கள் கணேசன், சிவக்குமாா் ஆகியோா் அதிக மதுப் புட்டிகளை தர மறுத்துள்ளனா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபா் கத்தியால் இருவரையும் தாக்க முயன்றுள்ளாா். ஆனால், கடைக்கு இரும்புக் கதவு போடப்பட்டிருந்ததால் விற்பனையாளா்கள் இருவரும் காயமின்றி தப்பினா். இதனைத் தொடா்ந்து அந்த நபா் தப்பியோடி விட்டாா்.
இதையடுத்து, கத்தியால் தாக்க முயன்ற நபரை கைது செய்யக் கோரியும், கடைக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் விற்பனையாளா்கள் உடனடியாக மதுக் கடையை மூடினா்.
இவா்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியிலிருந்த மேலும் 2 மதுக் கடைகள், ஆரணி சாலை பயணியா் விடுதி எதிரில் உள்ள மதுக் கடை, பாதிரி கிராமத்தில் உள்ள மதுக் கடை உள்ளிட்ட மதுக் கடைகளும் மூடப்பட்டன. இதனால் மது வாங்க வந்த மதுப் பிரியா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

