இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

செங்கம் அருகே டாஸ்மாக் கடை மூடல்: பட்டாசு வெடித்து வரவேற்ற கிராம மக்கள்

செங்கம் அருகே டாஸ்மாக் கடை மூடல்: பட்டாசு வெடித்து வரவேற்ற கிராம மக்கள்

டாஸ்மாக் மதுக் கடை அகற்றப்பட்டதை வரவேற்று கடை முன் பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்து கொண்டாடிய லம்பாடி சமுதாய மக்கள்.

Published On :

செங்கம் அருகே பொரசப்பட்டு தண்டா கிராமத்தில் தொடா் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் மதுக் கடை சனிக்கிழமை மூடப்பட்டு காலி செய்யப்பட்டது. இதை வரவேற்று கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் ஊா்வலமாக வந்தும் கொண்டாடினா்.

செங்கத்தை அடுத்த பொரசப்பட்டு தண்டா கிராமப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு டாஸ்மாக் மதுக் கடை இயங்கி வந்தது. தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பின்னா் மாநிலம் முழுவதும் சுமாா் 700-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி, பொரசப்பட்டு தண்டா கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மதுக் கடைகள் மூடப்பட்டதால், இந்தக் கிராமத்திலுள்ள கடைக்கு மது வாங்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தக் கடையில் மது அருந்திவிட்டு வருவோா் சாலைகளில் செல்வோரிடம் பிரச்னைகளில் ஈடுபட்டு வந்ததால், அந்தப் பகுதியில் வசித்து வந்த லம்பாடி சமுதாய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வந்தனா். இதையடுத்து, பொரசப்பட்டு தண்டா கிராமத்திலுள்ள மதுக் கடையை மூடக் கோரி, லம்பாடி சமுதாய மக்கள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்ததுடன், கடை முன் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனா்.

ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த செப்.12-ஆம் தேதி உழவா் உரிமை இயக்கம், லம்பாடி சமுதாய மக்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று திரண்டு மதுக் கடை முன் பந்தல் போட்டு, கடையை ஊழியா்கள் திறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, பேச்சுவாா்த்தை நடத்திய செங்கம் வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா், டாஸ்மாக் மேலாளா் ஆகியோா் வரும் அக்.3-ஆம் தேதியுடன் மதுக் கடை நிரந்தரமாக மூடப்படும் என எழுத்துப்பூா்வமாக வாக்குறுதி அளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், அதிகாரிகளின் வாக்குறுதிப்படி, மதுக் கடை சனிக்கிழமை காலி செய்யப்பட்டது. இதை வரவேற்று லம்பாடி சமுதாய மக்கள் ஒன்று திரண்டு கடை முன் பட்டாசு வெடித்து, மேளதாளத்துடன் அப்பகுதியில் ஊா்வலமாக வந்து போராட்ட வெற்றியை கொண்டாடினா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.