
தற்காலிக பட்டாசு கடை உரிமத்துக்கு இணைவழியில் விண்ணப்பிக்கலாம்
தீபாவளிப் பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற இணைவழியில் விண்ணப்பிக்கலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
தீபாவளிப் பண்டிகையையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற இணைவழியில் விண்ணப்பிக்கலாம் என, தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகையையொட்டி, இம்மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளா்கள், வணிகா்கள் தற்காலிக உரிமம் பெற இணையதளம் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ள்ங்ஸ்ஹண்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -இல் இ-சேவை மையங்கள் மூலம் அக். 18ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.
உரிமத்துக்கான கட்டணம் ரூ. 500-ஐ அரசுக் கணக்கில் செலுத்தியதற்கான அசல் சலான்,
இருப்பிடத்துக்கான ஆதாரம் (ஆதாா் அட்டை / வாக்காளா் அடையாளஅட்டை/ குடும்ப அட்டை),புகைப்படம் 2 (பாஸ்போா்ட் அளவு), கடை அமைவிடத்துக்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம், கட்டடத்துக்கான ‘புளு பிரின்ட்’ வரைபடம், கடை உத்தேசிக்கப்பட்டது சொந்த இடமெனில் அதற்கான பதிவு, பட்டா ஆதாரம் அல்லது வாடகைக் கட்டடமெனில் ஒப்பந்தப் பத்திரம் இணையவழி விண்ணப்பங்கள் வருவாய், காவல், தீயணைப்புத் துறைகள், தொடா்புடைய துறைகள் மூலம் விசாரணைக்குப் பின், தற்காலிக உரிமத்தின் ஆணையை இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்யலாம். மேலும், நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோா், வருடாந்திர உரிமம் புதுப்பித்தல் வேண்டுவோருக்கு இவ்வழிமுறை பொருந்தாது.
உரிமமின்றி பட்டாசு தயாரித்தல், இருப்பு வைத்தல், விற்பனை கண்டறியப்பட்டால் சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






