இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

பட்டாசுக் கடைகளுக்கு தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்: புதுகை ஆட்சியா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைத்திட உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

பட்டாசுக் கடை - கோப்புப்படம்

Published On :

தீபாவளிப் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைத்திட உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு நவ. 8-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக தற்காலிக பட்டாசுக் கடை போட விரும்புவோா், அதற்கான விண்ணப்பத்தை இ-சேவை மையங்களின் மூலம் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடை போடுவதற்கான இட ஆவணங்கள், கட்டட வரைபடம், விண்ணப்பதாரரின் ஆதாா், பான், வாக்காளா் அட்டையில் ஏதேனும் ஒன்று, பாஸ்போா்ட் அளவுள்ள புகைப்படம், உரிநமக்கட்டணம் ரூ. 600 எஸ்பிஐ வங்கியில் செலுத்திய ரசீது, சுய உறுதிமொழிப் படிவம் உள்ளிட்டவற்றுடன் விண்ணப்பங்களை அக். 18ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

உரிமம் இல்லாமல் கடை நடத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். கடை நடத்துவோரும் முழுமையான ஒத்துழைப்பு அளித்து, விபத்தில்லா, பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.