
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்க... கொளுத்தும் வெய்யிலில் குடையுடன் போராட்டம்!
டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி போராட்டம்.

டாஸ்மாக் கடை முன் குடைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கரூர்: கரூரில் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்திட கோரி பொதுமக்கள் கொளுத்தும் வெய்யிலில் குடைகளுடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கடை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பசுபதிபாளையம் அடுத்த கொளந்தா கவுண்டனூரில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது குடிக்க வரும் மது பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு அப்பகுதியில் குடியிருப்பவர்களின் வீடுகள் முன் அமர்ந்து மது குடித்து வருவதாகவும், சிலர் வீடுகள் முன் மது போதையில் ஆடைகள் இன்றி அவ்வப்போது கிடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும், சிலர் மதுபோதையில் சாலையோரம் அமர்ந்து சாலையோர பகுதியை மதுக் கூடமாக மாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. மது பிரியர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொளந்தா கவுண்டனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இன்னும் மூன்று மாதத்திற்குள் கடையை வேற இடத்திற்கு மாற்றப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீஸார் வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் நான்கு மாதங்களுக்கும் மேலாகியும் இதுவரை கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொது மக்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் திடீரென கடைக்கு பூட்டு போட்டனர்.
பின்னர், கடை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்திற்கு வந்த டாஸ்மாக் உதவி மேலாளர் செந்தில் மற்றும் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் மற்றும் பசுபதிபாளையம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .
அப்போது கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக ஏற்கெனவே கூறி இருந்தீர்கள், ஆனால் இதனால் வரை மாற்றம் செய்யவில்லை, இனியும் இடம் மாற்றம் செய்யப் போவதில்லை, ஆதலால் கடையை இன்று வேற இடத்திற்கு மாற்றினால் மட்டுமே நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.
இதனிடையே வெய்யிலின் தாக்கம் அதிகரித்ததால் புதியதாக குடைகள் வாங்கி வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், குடைகளுடன் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Summary
On Sunday afternoon, members of the public staged a protest in front of a TASMAC shop in Karur, demanding its relocation, while standing with umbrellas under the scorching sun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







