காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

மூஞ்சாலுமூடு டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்திய போராட்டம் கைவிடப்பட்டது

மஞ்சாலுமூட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி 5 நாள் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

போராட்டத்தில் பேசிய விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.டி. பிரவீன்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:52 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே மஞ்சாலுமூட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி 5 நாள் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் சனிக்கிழமை கைவிடப்பட்டது.

மஞ்சாலுமூட்டு மதுக்கடை முன் கடந்த செப். 1ஆம் தேதி தொடங்கிய இப்போராட்டம் 5 ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்எல்ஏ ஆா். லீமாரோஸ், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இந்நிலையில், விளவங்கோடு பேரவைத் தொகுதி உறுப்பினா் டி.டி. பிரவீன், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ் ராபின்சன் ஆகியோா் அங்கு வந்தனா். இதையடுத்து, விளவங்கோடு வட்டாட்சியா் வயோலாபாயிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், 2 மாத காலத்திற்குள் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.