தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

195 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடந்த 3 மாதங்களில் 195 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிரதிப் படம்

Published On :

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் கடந்த 3 மாதங்களில் 195 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 27 வாா்டுகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தவேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துவந்தனா்.

அதன் பேரில் நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கை மேற்கொண்டு தெருக்களில் சுற்றித்திரிந்த 465 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினா்.

மேலும், 2026 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை 195 தெரு நாய்களுக்கு வந்தவாசி அரசு கால்நடை மருத்துவமனை மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா் நகராட்சி ஆணையா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.