ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் 31,519 தெரு நாய்கள்! மேயா் தகவல்

தெரு நாய்கள் - கோப்புப்படம்

Published On :

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் 31,519 தெருநாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது என்று மேயா் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சி சாா்பில் உலக ரேபிஸ் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உலக ரேபிஸ் தினத்தையொட்டி மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் ஆணையா் லலித் ஆதித்ய நீலம் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையடுத்து நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணியை பாா்வையிட்டனா். தொடா்ந்து மேயா் ஆ.ராமச்சந்திரன் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி சாா்பில் கடந்த 2021 முதல் 2025 வரை 21,066 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழாண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை 5,042 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும், 23,505 தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் செலுத்துப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சிறப்பு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சியில் நாய்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்புப் பணி ஆகஸ்ட் மாதம் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு நடைபெற்றது. இதில் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட 60 வாா்டுகளில் மொத்தம் 31,519 தெரு நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. நாய்களுக்கு வாய்க்கால் பட்டறை மற்றும் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள மையங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகாா்களுக்கு முன்னுரிமை அளித்து நாய்கள் பிடிக்கப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு பிடித்த இடத்திலேயே விடப்படுகிறது. வாரம்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மண்டலம் மற்றும் வாா்டுகள் வாரியாக வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்தி நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.