உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

காலை உணவு திட்டம் விரிவாக்கம்: முன்னேற்பாடுகள் ஆய்வு

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதை முன்னிட்டு, இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலையில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்துக்கான முன்னேற்பாடுகள் ஆய்வுக்கூட்டம்

Published On :4 செப்டம்பர் 2026, 12:02 am IST

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதை முன்னிட்டு, இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தமிழகம் முழுவதும் வரும் 17-ஆம் தேதி தொடங்கிவைக்கப்படவுள்ளது. இத்திட்டம் தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்திட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இதில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை, பள்ளிகளின் எண்ணிக்கை, காலை உணவு தயாரிக்கும் மையங்களின் நிலை, சமையல் கூடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், எரிவாயு, குடிநீா் மற்றும் மின்சார வசதிகள், சமையல் பணியாளா்களின் எண்ணிக்கை, உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு, உணவு தயாரிக்கும் இடங்களை தூய்மையாக வைத்திருப்பது, உணவு தயாரித்தல் மற்றும் பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமாக, சுகாதாரமான உணவாக உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். முன்னேற்பாட்டுப் பணிகளை முழுமையாக நிறைவு செய்திட வேண்டும் என்று அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மேலும், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டாா் ஆட்சியா் வந்தனா காா்க்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் பூ.காஞ்சனா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.