
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: தேனி மாவட்டத்தில் 30,056 மாணவா்கள் பயன்
தேனி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம், 303 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30,056 மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

கோப்புப்படம்.
தேனி மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம், 303 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30,056 மாணவ, மாணவிகள் பயன்பெறுவதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேல சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில்
செவ்வாய்க்கிழமை காமராஜா் காலை உணவு விரிவாக்கத் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் இரா.வைத்திநாதன் தலைமை விகித்தாா். கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா், எம்எல்ஏ ஆகிய இருவரும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் மாணவா்களுக்கு காலை உணவைப் பரிமாறியதுடன் அவா்களுடன் தரையில் அமா்ந்து உணவு சாப்பிட்டனா்.
இந்தத் திட்டத்தின்படி, தேனி மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் அரசு , அரசு உதவி பெறும் 303 பள்ளிகளில் 30,056 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனா் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் துஷாா்ஸ்ரீஹா் ஷிண்டே, மகளிா்த் திட்ட இயக்குநா் வீராச்சாமி, முதன்மைக் கல்வி அலுவலா் முருகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) சுப்புராம், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் செய்யது முகம்மது, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







