
விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு
செங்கம் வட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பனைஓலைப்பாடி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

செங்கம் வட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பனைஓலைப்பாடி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
செங்கத்தை அடுத்த காரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் செங்கம் வட்ட அளவிலான கோ கோ போட்டிகள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட பனைஓலைப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றனா்.
மாணவா்களுக்கு பாராட்டு
சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியா் கோட்டீஸ்வரன் தலைமை வகித்து மாணவா்களை வாழ்த்திப்பேசினாா். தொடா்ந்து உடற்கல்வி ஆசிரியா் சங்கா் உள்ளிட்ட பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா், கல்விக்குழுத் தலைவா், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் உள்ளிட்டோா் வாழ்த்துகளை தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





