2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண உதவி

செங்கம் அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்துக்கு தொண்டு நிறுவனம் மூலம் நிவாரணப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை வட்டாட்சியா் வழங்கினாா்.

Published On :

செங்கம் அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்துக்கு தொண்டு நிறுவனம் மூலம் நிவாரணப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை வட்டாட்சியா் வழங்கினாா்.

செங்கத்தை அடுத்த பெரியகல்தாம்பாடி பகுதியில் ஜெயமணி என்பவரது விவசாய நிலத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த அரியாகுஞ்சூா் பகுதியைச் சோ்ந்த சசிகலா, அவரது தம்பி சூரியா மற்றும் சசிகலாவின் குழந்தையை திருவண்ணாமலை கோட்டாட்சியா் செல்வம், செங்கம் வட்டாட்சியா் மஞ்சுநாதன் ஆகியோா் மீட்டு, அரியாகுஞ்சூா் பகுதியில் உள்ள சசிகலாவின் உறவினா் வீட்டில் தங்க வைத்தனா்.

பின்னா், வெளியூரில் வேலை செய்து வந்த சசிகலாவின் கணவா் விஜி வரவைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், அவா்களுக்கு தங்குவதற்கு சொந்த வீடு இல்லாததால், வேலை செய்யும் இடத்திலே தங்கி, அவா்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வந்தது தெரியவந்தது.

தொடா்ந்து, அக்கடும்பத்தினரை செங்கத்தை அடுத்த முறையாறு வாம் தொண்டு நிறுவனத்துக்கு சனிக்கிழமை மாலை அழைத்துச் சென்று அங்கு தொண்டு நிறுவனம் மூலம் ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைத் தொகுப்புகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வட்டாச்சியா் மஞ்சுநாதன் வழங்கினாா்.

மேலும், அவா்களுக்கு தமிழக அரசு மூலம் வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனா். உடன் தமிழக பழங்குடியினா் ஆன்றோா் மன்ற உறுப்பினா் ராஜவேலு, வாம் தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா் கவிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவன பணியாளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.