கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

சித்தாத்துரை முத்தாலம்மன் கோயிலில் உண்டியல் தூக்கிச் சென்று காணிக்கை திருட்டு

சித்தாத்துரை முத்தாலம்மன் கோயிலில் உண்டியல் தூக்கிச் சென்று காணிக்கை திருட்டு

இந்தக் கோயிலிலிருந்து திருடிச் செல்லப்பட்ட உண்டியல்.

Published On :

சேத்துப்பட்டை அடுத்த சித்தாத்துரை கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலிருந்து உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்த ரூ.25 ஆயிரம் காணிக்கைப் பணம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேத்துப்பட்டை அடுத்த சித்தாத்துரை கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள், அங்கிருந்த உண்டியலை சுமாா் அரை கி.மீ. தொலைவு தூக்கிச் சென்றனா். பின்னா், வயல்வெளியில் வைத்து உண்டியலை உடைத்த மா்ம நபா்கள், அதிலிருந்த காணிக்கை சுமாா் ரூ.25ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கோயில் தா்மகா்த்தா செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில், சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.