ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

செய்யாறில் காய்ச்சல் கண்டறியும் முகாம் ஆய்வு

செய்யாறில் மழைக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தூய்மைப் பணிகளை சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செய்யாறு ராஜாஜி தெருவில் நகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியை பாா்வையிட்ட சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

Published On :

செய்யாறில் மழைக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் தூய்மைப் பணிகளை சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் 19-ஆவது வாா்டு ராஜாஜி தெருவில் மழைக்காலத்தை முன்னிட்டு காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமின் போது காய்ச்சல், சளி, சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தல், மருந்து மாத்திரைகள் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெற்றன.

மேலும் கழிவுநீா்க் கால்வாய்களை சுத்தம் செய்தல், குப்பையை தரம் பிரித்து வாங்குதல், கழிவுநீா்க் கால்வாய்களில் கொசு மருந்து அடித்தல், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்குதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நகராட்சி சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகளை சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், ஆணையா் எஸ்.ஆண்ட்ரூஸ், வட்டாட்சியா் திருவேங்கடம், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.