ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

செங்கத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் புதன்கிழமை பெய்த திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தோக்கவாடி பகுதியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் வெளியேற வழியின்றி தொழிலாளி வீட்டை சூழ்ந்துள்ள மழைநீா்.

Published On :

திருவண்ணாமலை, செங்கம் பகுதியில் புதன்கிழமை பெய்த திடீா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமாா் 11 மணியளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. காலையில் பொதுமக்கள் விவசாயிகள் எழுந்தபோது சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியிருந்ததைப் பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.

விவசாயிகளுக்கு விதைநெல் நாற்றுவிட்டு எப்படி நடவு செய்வது என்ற தயக்கம்போய் நெல் நடுவு செய்யத் தயாராகினா்.

இந்நிலையில் புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மழை பெய்தது. மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.

மழையளவு

மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கத்தில் 43.20 மி.மீ. மழை பதிவானது.

திருவண்ணாமலை- 38 மி.மீ., ஜமுனாமரத்தூா் -37 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் -25.40 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.