ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

பெருங்கட்டூா் நூலகத்தில் பரிசளிப்பு விழா

செய்யாறை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா என புதன்கிழமை நடைபெற்றது.

நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு பெற்ற பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள்.

Published On :

செய்யாறை அடுத்த பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா என புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நல் நூலகா் ஜா.தமீம் தலைமை வகித்தாா். தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் திவ்யலட்சுமி, திவ்யபாரதி, லாவண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். திட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியா் விருது பெற்ற அ.முபாரக் பங்கேற்றாா். அப்போது, பள்ளி மாணவா்கள் விடுமுறையில் என்ன செய்ய வேண்டும், விடுமுறை தினங்களில் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களை வாசித்து அறிவை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்னா், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு தொண்டு நிறுவனம் சாா்பில் எழுது பொருள்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நூலக வாசகா்கள் மற்றும் மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.