தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆண்டியப்பனூர் சிறுமி கொலை வழக்கு நேர்மையான விசாரணை கோரி

வாணியம்பாடி அருகேயுள்ள ஆண்டியப்பனூரில் 9 வயது சிறுமி காயத்ரி கொலை வழக்கில் நேர்மையான விசாரணையை நடத்தக் கோரி, காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் இம்மாதம் 9ஆம் தேதி முற்றுகையிடப்படும் என இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் கூறினார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:38 pm

தினமணி

வாணியம்பாடி அருகேயுள்ள ஆண்டியப்பனூரில் 9 வயது சிறுமி காயத்ரி கொலை வழக்கில் நேர்மையான விசாரணையை நடத்தக் கோரி, காங்கிரஸ் சார்பில் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலுவலகம் இம்மாதம் 9ஆம் தேதி முற்றுகையிடப்படும் என இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் விஜய் இளஞ்செழியன் கூறினார்.

டிச.27ஆம் தேதி கொலை செய்யப்பட்ட இச்சிறுமியின் பெற்றோர் ராமசந்திரன், கௌரி ஆகியோரை அவரது இல்லத்தில் விஜய் இளஞ்செழியன் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்

இதையடுத்து, அவர் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

சிறுமியின் கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியல் செய்ததாக 152 பேர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும்.  சிறுமியின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கக் கோரி, தமிழக ஆளுநரிடம் முறையிடப்படும் என்றார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலர் ரியாஸ் அகமது, மாவட்ட துணைத் தலைவர் பிரபு, நகரத் தலைவர் பொன்.இளங்கோவன், ஒன்றியத் தலைவர்கள் நந்தி (திருப்பத்தூர்), கோவிந்தராஜ் (ஆலங்காயம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.