தொழிற்கல்வி பட்டயத் தேர்வு முடிவு:
அண்மையில் வெளியான தொழிற்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகளில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.


அண்மையில் வெளியான தொழிற்கல்வி பட்டயத்தேர்வு முடிவுகளில், மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவில் 5ஆம் பருவத் தேர்வில் மாணவி எஸ்.வென்சி ஸ்வேதா 600-க்கு 595 மதிப்பெண்கள்களைப் பெற்று மாநிலத்தில் முதலிடத்தையும், 2ஆம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன்ஸ் மாணவி கே.ஷாஹினாபானு 700-க்கு 694 பெற்று மாநிலத்தில் 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
இக்கல்லூரி மாணவி அபிராமி, மாணவர்கள் ஆர்.கிருஷ்ணன், கே.நூர்மா, பி.திருமால் உள்ளிட்டோரும் மாநில அளவிலான பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இதையடுத்து, இவர்களைப் பாராட்டி பரிசுகளை ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமத் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியம் சனிக்கிழமை வழங்கினார்.
ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் கே.சாம்பமூர்த்தி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜி.செந்தில்குமார், துறைத் தலைவர் ஜி.சுதா, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், பாலிடெக்னிக் கல்லூரி மேலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரி ஆண்டுதோறும் மாநில அளவில் சிறப்பிடங்களைப் பிடித்து வருகிறது என கல்லூரி நிர்வாகிகள் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...