ஆம்பூரில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.
ஆம்பூர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென தொடங்கிய மழை விடாமல் அதிகாலை வரை தொடர்ந்தது.
நாயக்கனேரி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கானாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆனைமடுகு, நதிசீலாபுரம் தடுப்பணைகள் நிரம்பி வழிந்தன.
நதிசீலாபுரம் பகுதி தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிவதை நகர்மன்றத் தலைவர் சங்கீதா பாலசுப்பிரமணி பார்வையிட்டார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல்.குமார் உடனிருந்தார். தடுப்பணைகளில் தண்ணீர் வற்றி சிறிதளவே தேங்கியிருந்தது.
இந்த நிலையில், இவை நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பணைகளைத் தூர்வாரினால் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்படும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

