47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் கிராம மக்கள்..!

ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை

News image
Updated On :4 நவம்பர் 2017, 9:17 pm

து. ரமேஷ்

ஜோலார்பேட்டை ஒன்றியம், பாச்சல் ஊராட்சிக்கு உள்பட்ட லட்சுமி நகர் பகுதியில் சாலை, தெருவிளக்கு, கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இப்பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக உள்ளன. இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும்  பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், 108 ஆம்பூலன்ஸ், பள்ளி வாகனங்கள் செல்ல முடியவில்லை.
எரியாத தெருவிளக்குகள்: தெரு விளக்குகளில் சில பழுதடைந்துள்ளதால் பணி முடிந்து வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர். மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்குகின்றனர்.
பயன்பாட்டில் இல்லாத கழிப்பறைக் கட்டடம்: இப்பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி 2 கழிப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் பூட்டியே உள்ளன. இதனால், சுற்றிலும் புதர் மண்டிக் கிடக்கிறது.
பராமரிப்பில்லாத அடிபம்பு: பயன்பாட்டில் இருந்த அடிபம்பு போதிய பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்துள்ளது.  இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பழுது சரி செய்யப்படவில்லை.
ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி: பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி தற்போது சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே வசிக்கும்  பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் தொட்டியைச் சீரமைக்க வேண்டும்.
நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.