உலக பார்வையிழப்பு தடுப்பு தினம்: கண்களைக் கட்டிக் கொண்டுமருத்துவர்கள் ஊர்வலம்

வேலூரில் உலக பார்வையிழப்பு தடுப்பு தினத்தை முன்னிட்டு, கண்களைக் கட்டிக் கொண்டு மருத்துவர்கள் வியாழக்கிழமை ஊர்வலம் சென்றனர்.
Updated on
1 min read

வேலூரில் உலக பார்வையிழப்பு தடுப்பு தினத்தை முன்னிட்டு, கண்களைக் கட்டிக் கொண்டு மருத்துவர்கள் வியாழக்கிழமை ஊர்வலம் சென்றனர்.
பார்வையற்றோருக்கு உதவிட பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையில் இருந்து புறநோயாளிகள் பிரிவு வரையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், பார்வையிழப்பு தடுப்பு சங்க அலுவலர் பிரமிளா, உறுப்பினர் சரஸ்வதி, பென்ட்லேண்ட் மருத்துவமனை அலுவலர் ஜெயகீதா, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை உதவிப் பேராசிரியர் சர்மிளா, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com