ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிடிவி தினகரன் மீது காவல் நிலையங்களில் புகார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரை மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் பேசியதாக, அவர் மீது

News image
Updated On :12 அக்டோபர் 2017, 7:16 pm

DIN

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரை மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் பேசியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் நகர மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில், அதிமுக நகர இளைஞரணிச் செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஏ.எல்.நாகராஜன் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர்.
அதில், முதல்வர் மற்றும் பேரவைத் தலைவரை மிரட்டும் வகையில் பேசிய டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இப்புகாரை நகர ஆய்வாளர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.
இதே போல, அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் காவேரிபாக்கம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் பழனி, வளர்புரம் ஊராட்சிச் செயலாளர் முத்தப்பன், சோகனூர் கிளைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோரும் தனித்தனியே புகார் மனு அளித்தனர். இவற்றை கிராமிய ஆய்வாளர் அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.