பச்சகுப்பம் தரைப்பாலத்தில் மீண்டும் வாகனங்கள் இயக்கம்
ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தில் 10 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை முதல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.


ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தில் 10 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை மாலை முதல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, ஆம்பூர் அருகே பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலத்தில் 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் சென்றது. இதனால், பாதுகாப்பு கருதி அவ்வழியே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் மற்றும் தரைப்பாலம் சேதமடைந்தன. பாலாற்று வெள்ளம் காரணமாக அழிஞ்சிகுப்பம், ரெட்டிமாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 10 நாள்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், வெள்ளம் குறைந்ததால், சேதமடைந்த தரைப்பாலத்தின் பக்கவாட்டு பகுதியை நெடுஞ்சாலைத் துறையினர் தாற்காலிகமாக சீரமைத்தனர். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் ஆர்.சரவணன் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது உதவிக் கோட்ட பொறியாளர் நாகராஜி, உதவிப் பொறியாளர் ராஜ்குமார், சாலை ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தரைப்பாலம் சீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...