மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள  உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:14 pm

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள  உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  
சமூக பாதுகாப்புத் துறையின்கீழ், வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதியானவர் நியமிக்கப்பட உள்ளார்.  ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சியும், கணினி இயக்குவதில் ஓராண்டு முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2018 ஏப்ரல் 1-இல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 
தகுதியுடைய நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வேலூர் அண்ணா சாலை, சுற்றுலா மாளிகை எதிரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416 -2222310 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.