இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

சிறப்பு மனுநீதி நாள் முகாம்

ஆற்காடு வட்டம், கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

ஆற்காடு வட்டம், கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. 
முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் வேணுசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆற்காடு வட்டாட்சியர் சுமதி வரவேற்றார்.  முகாமில் ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சரஸ்வதி, வட்ட வழங்கல் அலுவலர் பழனிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆம்பூரில்...
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் சி. பேபி இந்திரா தலைமை வகித்து 98 பயனாளிகளுக்கு ரூ. 60 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் முரளிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள் கோவிந்தசாமி, செந்தில்குமரன், சுபாஷினி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.