பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எடுத்துக் கொண்ட இடத்துக்கு உரிய இழப்பீட்டை நில உரிமையாளருக்கு வழங்க கால அவகாசம் கோரியதை அடுத்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் வாகனம், அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்யும் நீதிமன்ற நடவடிக்கை கைவிடப்பட்டது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அப்போது, பள்ளிக்கு அருகே இருந்த 30 சென்ட் தனியார் நிலத்தையும் சேர்த்து வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இந்
நிலையில், நில உரிமையாளர் கிருஷ்ணவேணி, வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிக்கப்பட்ட 30 சென்ட் நிலத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது.
ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு வழங்கப்படவில்லை. இதையடுத்து கிருஷ்ணவேணி தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வெற்றிச்செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் வாகனம், அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்து ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள முற்பட்டனர்.
இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், இழப்பீடு வழங்க நீதிமன்ற ஊழியர்களிடம் காலஅவகாசம் கோரினார். இதையடுத்து நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு திரும்பினர். இச்சம்பவத்தால் முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உடுமலையில் சா்வதேச அளவிலான கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பரிசு

தோ்வு ரத்து முடிவு எதிரொலி: ஜாா்க்கண்டில் அரசு ஊழியா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்

பசுமைத் திட்டம் மூலம் 3 பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி

திருமண மண்டபங்களில் ஆடை விற்பனை நடத்துவதற்கு அனுமதி இல்லை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


