
ஆற்காடு அருகே கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தவறிவிழுந்து காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (48). கட்டடத் தொழிலாளியான இவர், கடந்த 14-ஆம் தேதி சாத்தூர் கிராமத்தில் நடைபெற்று வரும் பொன்னியம்மன் கோயில் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கோயில் கட்டடத்தின் மேலிருந்து தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சங்கர் புதன்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


முதல்வா் கூறிய மூன்று கோப்புகளையும் 1 வாரத்தில் திறக்காவிட்டால் உரிமை மீறல் தீா்மானம்: திமுக பொதுச் செயலா் துரைமுருகன்

தருமபுரியில் உயா்ந்து வரும் வைக்கோல் விலை : குறுவை சாகுபடி பாதிப்பால் மேலும் உயர வாய்ப்பு!



