கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ். குருப்ஸ் மற்றும் நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாம் கடந்த 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.


ஆற்காடு சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.வி.எஸ். குருப்ஸ் மற்றும் நிறுவனங்கள் சார்பில் வளாகத் தேர்வு வேலைவாய்ப்பு முகாம் கடந்த 23 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.
முகாமை, கல்லூரிப் பொருளாளர் பி.பாலகிருஷ்ணன், தலைவர் கே.குப்புசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இயந்திரவியல் மற்றும் மின்னியல் பிரிவைச் சேர்ந்த 110 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நிரந்தர பணி மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும் என நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை சித்தீஸ்வரர் கல்வி அறக்கட்டளைச் செயலாளர் ஜி.செல்வகுமார், தாளாளர் டி.தரணிபதி மற்றும் இயக்குநர்கள் எம்.சங்கர், எஸ். ஆதிகேசவன், டி. பச்சையப்பன், கே.கிருபானந்தன், வி.உமாசங்கர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...