வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரத்தினகிரி விஜய துர்கையம்மனுக்கு 1,008 கலச பூஜை

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள  விஜய துர்கையம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலச பூஜை நடைபெற்றது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:46 pm

DIN

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள  விஜய துர்கையம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை 1,008 கலச பூஜை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு, பெங்களூரு  வித்யா பீட ஆகமபாட சாலை முதல்வர்  எ.எஸ்.சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமை வகித்தார். பால
முருகனடிமை சுவாமி முன்னிலை வகித்தார்.
 இதில் முருகப்பெருமானுக்கு ஸ்கந்த யாகம், விஜய துர்கையம்மனுக்கு மகா சண்டியாகம் நடைபெற்றது. யாக பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து  அலங்கரிக்கப்பட்ட உற்சவர் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, யாக சாலை பந்தலில் வைக்கப்பட்டார். இதில் 1008 கலச பூஜைகள், யாகம் நடைபெற்றது.
 நிகழ்ச்சியில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், திருவலம் ஸாந்தா சுவாமி, தன்வந்திரிபீடம்  முரளிதர சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.