பிளஸ் 2 பொதுத்தேர்வு: 41,351 பேருக்கு ஹால் டிக்கெட் விநியோகம்

பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி, வேலூர் மாவட்டத்தில் 41,351 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
Updated on
1 min read

பிளஸ் 2 பொதுத் தேர்வையொட்டி, வேலூர் மாவட்டத்தில் 41,351 மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1 தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேலூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 9,615 மாணவர்கள், 11,482 மாணவிகள், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் இருந்து 9,732 மாணவர்கள், 10,522 மாணவிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 41,351 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ளனர்.
இந்நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்டுகளை அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பள்ளியின் ரகசிய குறியீடு எண், பதிவு எண்களைப் பயன்படுத்தி ஹால்டிக்கெட்டுகளை வரும் 26-ஆம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் ஹால்டிக்கெட்டுகளை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு விநியோகிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் ஹால்டிக்கெட் முழுமையாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com