ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மார்ச் 1-இல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:21 pm

DIN

வேலூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு வட்டங்களில் கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்திருப்பதாகவும், இந்நோயால் ஏராளமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து 14-ஆவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. 
விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை இந்த முகாமுக்கு அழைத்து வந்து கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். 4 மாதம் நிறைவடைந்த இளங்கன்றுகளுக்கும், சினையாக உள்ள பசுக்கள், எருமைகளுக்கும் இந்த தடுப்பூசி போடுவது அவசியமாகும். இதனால், பசுக்கள், எருமைகளின் பால் உற்பத்தி குறையாது. 
தங்கள் பகுதியில் முகாம் நடைபெறும் நாள்கள் குறித்து தண்டோரா மூலமாகவும், ஒலிப்பெருக்கி மூலமாவும் தகவல் தெரிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.