இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாலை மறியல்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கைது

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 7:22 pm

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஊரக செயலர்களுக்கு பதிவுறு எழுத்தர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், தேர்தல் நேரங்களில் ஆய்வுக் கூடம், விடுமுறை நாள்களில் களப்பணி செய்வதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 6-ஆம் நாளான திங்கள்கிழமை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோசப் கென்னடி, மாநிலச் செயலர் பாரி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கோஷங்கள் எழுப்பியடி தடையை மீறி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.