நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த வாணியம்பாடி ஷெம்போர்டு பள்ளி மாணவியை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள ஷெம்போர்டு சீனியர் செகண்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த 13 மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினர். இதில் 8 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் மாணவி கீர்த்தனா அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கலந்தாய்வில் கலந்துகொண்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடத்தைப் பிடித்தார்.
சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவுக்கு, பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளித் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் கிருபாகரன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் சிங்காரவேலன் உள்ளிட்டோர் பதக்கம் மற்றும் பரிசுகளை அளித்து பாராட்டினர். சாதனை படைத்த மாணவிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பள்ளி முதல்வர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்

சமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

