கல்வியின் முக்கிய நோக்கம் ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதேயாகும் என மத்திய மனித வள மேம்பாடு, நீர்வளத் துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் தெரிவித்தார்.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில், வித்யா நேத்ரம் திட்டத்தின் கீழ், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய மனித வள மேம்பாடு, நீர்வளத்துறை இணை அமைச்சர் சத்யபால்சிங் பங்கேற்று, 600 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் உதவித் தொகைக்கான காசோலையை வழங்கிப் பேசியதாவது:
ஒரு குழந்தையின் தேவை தாய்க்குத் தெரியும். இங்கு பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதால் சக்தி அம்மாவும் ஒரு தாய்தான். வாழ்க்கையில் சாதிக்க ஆங்கிலம் முக்கியமல்ல. முதலில் தாய்மொழியைக் கற்க வேண்டும். இங்குள்ள மாணவ, மாணவிகள் முதலில் தமிழை முழுமையாக கற்க வேண்டும். கல்வியின் முக்கிய நோக்கமே ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதுதான். இந்தியாவில் 1100க்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. எந்தக் குழந்தையும் கல்வி கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அனைத்து பெற்றோரும், பிள்ளைகளும் நமக்கான திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, நாராயணி பீடத்தின் பீடாதிபதி சக்தி அம்மா தலைமை வகித்துப் பேசியதாவது:
பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள் எனக் கேட்டால், நல்ல வேலைக்குச் சென்று மற்றவர்களுக்கு நல்லது செய்வேன் என சப்தமாக கூறுவர். ஆனால், வேலைக்குச் சென்றதும் அந்த சப்தம் குறைந்துவிடும். அதிகப்படியான கல்விக்கடன் கட்ட வேண்டும், திருமணம், வேலை என ஏராளமான கடமைகள் வந்துவிடுவதே இதற்குக் காரணம். இந்த கடமைகளை வெற்றிகரமாக செய்வதற்கு இயற்கையாகவே சக்தி கிடைக்கிறது. அதேபோல், நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதை கடமையாக நினைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித தடங்கலும் இல்லாமல் நாம் நன்மைகளை செய்திட முடியும். நமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு, சமுதாயத்துக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக முடியாது. காரணம், மனிதனுக்குப் போதும் என்ற எண்ணம் எப்போதும் தோன்றாது. எனவே, மற்றவர்களுக்கு நன்மை செய்வதை நாம் கடமையாக ஏற்க வேண்டும் என்றார் அவர்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் முன்னிலை வகித்தார். நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, நாராயணி பீடம் இயக்குநர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சௌந்திரராஜன், மேலாளர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரறிவாளன் வழக்குரைஞா் பதிவு: சிபிஐ விசாரணை கோரிக்கையை நிராகரித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

குன்னம் பகுதியில் நாளை மின்தடை

திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்

மேற்கு வங்க முதல்வா் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் எம்.பி.க்கள் பங்கேற்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


