மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மதிமுக சார்பில் மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

வேலூர் கிழக்கு மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில், பெரியார்-அண்ணா என்ற தலைப்பில்   கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்  ஆற்காடு ஜன சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜூலை 2018, 12:37 am IST

வேலூர் கிழக்கு மாவட்ட மதிமுக மாணவர் அணி சார்பில், பெரியார்-அண்ணா என்ற தலைப்பில்   கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்  ஆற்காடு ஜன சங்கக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வேலூர் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் பி.என். உதயகுமார் தலைமை வகித்தார். வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இளங்கோவன் வரவேற்றார். போட்டியின் நடுவர்களாக கல்லூரி பேராசிரியர்கள் த.அன்பு, அப்துல் வஹாப், தமிழ்செல்வன் ஆகியோர் செயல்பட்டனர். அதில், ஆற்காடு டி.எல்.ஆர். கல்லூரி மாணவர் பிரித்வி ராஜ் முதல் பரிசும், மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லூரி மாணவர் ச.வெங்கடேசன் இரண்டாம் பரிசும், அரப்பாக்கம் அன்னைமீரா பொறியியல் கல்லூரி மாணவி ஷபிலாபர்சானா  மூன்றாம் பரிசும் பெற்றனர். 
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், லண்டன் பேராசிரியர் பிரேம்நாத் ஆகியோர்  கலந்து கொண்டு பரிசுத் தொகைகளை வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் சு.பிரகாசம் (ஆற்காடு), பி.சண்முகம் (ஒன்றியச் செயலாளர்கள் குட்டி வெங்கடேசன் (வாலாஜா), கே.ஜி.சீனிவாசன் (காட்பாடி),  தொண்டரணி பாண்டியன், இளைஞர் அணி ஜெ.ஜெயராமன், மாவட்டப் பிரதிநிதி ரவிராவ், நகர துணைச் செயலாளர் இ.கருணாகரன் உள்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.