காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கார்த்தி சிதம்பரம் கைது: காங்கிரஸார் சாலை மறியல்

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸார் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:08 pm

DIN

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸார் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஐஎன்எஸ்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ புதன்கிழமை கைது செய்தது. இதைக் கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் எதிரே வேலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்டத் தலைவர் பிரபு தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. 
இதில், மாவட்டப் பொருளாளர் மகேஷ், மாநில, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சரவணன், சுரேந்தர், ராமசாமி, பிரதாப், சோலூர்மாணிக்கம், மணி, ஸ்டாலின், வெங்கடேஷ், வெள்ளகுட்டை பழனி, வாணியம்பாடி நகர நிர்வாகிகள் ஜிலானி, தபரேஷ், காலித் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.