வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம் புறக்கணிப்பு 

கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்துள்ளதாக

News image
Updated On :1 மார்ச் 2018, 9:14 pm

DIN

கர்நாடக மாநிலத் தேர்தலை மனதில் வைத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணித்துள்ளதாக இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாணியம்பாடியில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின்  22-ஆவது மாவட்ட மாநாடு மற்றும் பிரதிநிதிகளின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு முன் செய்தியாளர்களிடம் முத்தரசன் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை எவ்வித தாமதமும் இன்றி மத்திய அரசு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  அவ்வாறு உத்தரவு வழங்கப்பட்டும்  இதுவரை மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. மத்திய தரைவழி, கப்பல் துறை அமைச்சர்  நிதின்கட்காரியும் காவிரி மேலாண்மை  வாரியம் குறித்து  திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.  
கர்நாடக மாநிலத்தில்  நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு தமிழக நலனுக்கு எதிராக செயல்படுகிறது.  அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும் மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் உள்ளன. 
விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அம்மாவட்டத்தில் காவல் துறையினர் சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்றார் அவர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.