விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேலூர் சிறையில் வார்டனை தாக்கிய பெண் கைதி: போலீஸார் விசாரணை

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனை பெண் கைது ஒருவர் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :21 மே 2018, 6:12 pm

வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சிறை வார்டனை பெண் கைது ஒருவர் சரமாரியாகத் தாக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர், மத்திய பெண்கள் சிறையில் கொலை, திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட சுமார் 350 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளுக்கு மாதம் ஒரு முறை அல்லது இரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மனநல மருத்துவர் செல்வக்குமார், வேலூர் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்தார்.
அப்போது, சிறை சமையலறையில் ஓசூரைச் சேர்ந்த கொலைக் கைதியான வித்யா(30) இருந்தார். அவரை சிறை வார்டன் சுதா மருத்துவப் பரிசோதனைக்கு வரும்படி அழைத்தாராம். ஆனால், கைதி வித்யா மருத்துவப் பரிசோதனைக்கு வரமறுத்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிகிறது.
அப்போது, சுதாவுக்கும், கைதி வித்யாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த வித்யா, சிறை வார்டன் சுதாவை கடுமையாக தாக்கியதாகத் தெரிகிறது. உடனடியாக அங்கிருந்த மருத்துவக் குழுவினரும், போலீஸாரும் வார்டன் சுதாவை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின்பேரில் பாகாயம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.