வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த
நாளை முன்னிட்டு, வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இலக்கிய அணி மற்றும் முரசொலி அறக்கட்டளை சார்பில், பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்பித்தல் போட்டி ராணிப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் இரா.சிவஞானம் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பிஞ்சி சி.பிரகாஷ் வரவேற்றார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பாரதிதாசன் பாடலை ஒப்பித்தனர். இதில், சிறப்பாக ஒப்பித்த பள்ளி, கல்லூரி மாணவர்களில் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களைத் தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்று மாலை நடைபெற்றது.
விழாவில், வேலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி எம்எல்ஏ கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.கே.சுந்தரமுர்த்தி, மாவட்ட இலக்கிய அணித் தலைவர் ஜி.தருமன், வாலாஜா ஒன்றியச் செயலாளர் சேஷா வெங்கட், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத், நகர இலக்கிய அணி அமைப்பாளர் ஆர்.எஸ்.கருணாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள், கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% வளா்ச்சி

ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனை

போதைப்பொருள் கடத்தல்: தில்லியில் கைதான பெண்ணை சென்னை சிறைக்கு மாற்ற நடவடிக்கை
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

