ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பூங்காவில்  எம்எல்ஏ ஆய்வு

ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு,  இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:18 pm

ஆற்காடு நகரில் உள்ள பூங்காவில் மக்கும் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டு, அதில் மக்கும் பொருள்கள் சேகரிக்கப்பட்டு,  இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனை எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
அப்போது பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களுக்கு  இடையூறு இன்றி உரம் தயாரிக்கும் திட்டதை செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு எம்எல்ஏ உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆற்காடு நகர பேருந்து நிலையத்தில் சாலையின் நடுப்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பள்ளமான பகுதியைப் பார்வையிட்டு, அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
 நகராட்சி ஆணையர் ஷகிலா, பொறியாளர் அனந்தஜோதி, அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.