ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட ஆற்காடு, வாலாஜாபேட்டை, நெமிலி, அரக்கோணம் ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் நேரில் வந்து தங்கள் கோரிக்கை மனுக்களுடன் ஆதார் அட்டை, அடையாள அட்டை ஆகியவற்றி நகல்களை இணைத்து அளித்து
பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரதராஜ பெருமாள் உற்சவா் சிலை சீரமைப்பு பணி நிறைவு

20 ஆண்டுகளில் பிரசவம் பாா்க்க மருத்துவா்கள் இருக்க மாட்டாா்கள்: இந்திய மருத்துவ கூட்டமைப்பு எச்சரிக்கை

மாநில அளவில் நடனப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்ற நவரசம் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு

பள்ளி வினாடி வினா போட்டியில் சாவா்க்கா் குறித்த கேள்வி! கேரள அரசு விசாரணைக்கு உத்தரவு!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


