திருப்பத்தூர் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் ரயிலில் அடிபட்டு இறந்தார்.
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் அருகே உள்ள சு.பள்ளிப்பட்டு கீழ் குறும்பர் பகுதியைச் சேர்ந்த நடராஜனின் மனைவி காந்தி (55). தொழிலாளியான இவர், புதன்
கிழமை காக்கங்கரை அருகே உள்ள அண்ணா நகருக்குச் சென்றுள்ளார்.
காக்கங்கரை-திருப்பத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார், அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது

மூன்றாவது வீரராக களமிறங்கி சதம் விளாசி அசத்திய தேவ்தத் படிக்கல்; அதே இடத்தில் தொடர்வாரா?
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


