கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கூடுதல் விலைக்கு உணவுப் பண்டங்கள் விற்பனை: 10 திரையரங்குகள் மீது நடவடிக்கை

கூடுதல் விலைக்கு உணவுப் பண்டங்கள் விற்பனை செய்ததாக வேலூரிலுள்ள 10 திரையரங்குகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கூடுதல் விலைக்கு உணவுப் பண்டங்கள் விற்பனை செய்ததாக வேலூரிலுள்ள 10 திரையரங்குகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 
வேலூர் சட்டமுறை எடையளவு துணைக் கட்டுப்பாட்டு அதிகாரி தாமரைமணாளன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் கமலா, ஜம்பகம், உதவி ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், லோகநாயகி, சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் வேலூரிலுள்ள திரையரங்குகளில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
15 திரையரங்குகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களின் எடை, விலை, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் முகவரி உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளனவா? எனவும், உணவுப் பொருள்களில் அச்சிடப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 10 திரையரங்குகளில் உணவுப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த திரையரங்குகள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், இதுபோன்ற ஆய்வு அடிக்கடி தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.