ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவு

ஜி.கே. உலகப் பள்ளியில்  விளையாட்டுப் போட்டிகள்

பள்ளிகளுக்கு இடையிலான 5-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில்  ஜி.கே. உலகப் பள்ளி மாணவர்கள் பரிசுக் கோப்பையை வென்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

பள்ளிகளுக்கு இடையிலான 5-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில்  ஜி.கே. உலகப் பள்ளி மாணவர்கள் பரிசுக் கோப்பையை வென்றனர்.
ராணிப்பேட்டை ஜி.கே. உலகப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான 5-ஆம் ஆண்டு  விளையாட்டுப் போட்டிகள் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கின. இப்போட்டிகளை ஜி.கே. உலகப் பள்ளி செயல் இயக்குநர் வினோத் காந்தி, நிர்வாக இயக்குநர் சந்தோஷ் காந்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பள்ளி முதல்வர் பிரஷிதா ஸ்ரீ குமார் வரவேற்றார்.
இதில் வேலூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து 21 பள்ளிகளைச் சேர்ந்த 575 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கால்பந்து, நீச்சல், ஸ்கேட்டிங், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், வெற்றி பெற்ற ஜி.கே. உலகப் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோருக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஜி.கே. உலகப்பள்ளி செயல் இயக்குநர் வினோத் காந்தி தலைமை வகித்து, போட்டிகளில் முதலிடம் பெற்ற ஜி.கே. உலகப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழை வழங்கினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் மக்கள் தொடர்பு 
அலுவலர் சி.கே.நேரு, ஆசிரியர்கள்,  அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.