47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொற்றுநோய் கிடங்காக மாறிய அனந்தனேரி

திருப்பத்தூரில் உள்ள அனந்தனேரி தொற்றுநோய் பரப்பும் கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பத்தூரில்

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 6:18 pm

து. ரமேஷ்

திருப்பத்தூரில் உள்ள அனந்தனேரி தொற்றுநோய் பரப்பும் கிடங்காக மாறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பத்தூரில் சின்னக்குளம், பெரியகுளம் என இரு குளங்களும், பெரிய ஏரி, அனந்தனேரி என இரு ஏரிகளும் உள்ளன. இந்நிலையில், அனந்தனேரியானது சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தொற்றுநோய் கிடங்காக மாறி வருவதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், சுமார் 30 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் வாழும் மக்கள் குளிப்பதற்கும், துணிகளை சலவை செய்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த ஏரிக்கு கழிவு நீர் திருப்பி விடப்பட்டது.
இதனால், இந்த ஏரி மாசடைந்து, மக்கள் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும், இந்த ஏரிக்கு அவ்வை நகர், காமராஜர் நகர் பகுதியிலிருந்து மழை நீர் வந்தடைகிறது. ஆனால், ஏரியில் மதகுகள் அடைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், ஏரி நிரம்பி, அருகில் உள்ள கழனிகாட்டுக்குச் சென்று வீணாகிறது. முறையாக தூர் வாரப்பட்டால் ஏரி நிரம்பி, புலிக்குட்டை ஏரிக்குச் செல்லும். அந்த ஏரி நிரம்பினால், கொரட்டி பகுதியில் உள்ள வாலாறுக்குச் சென்று, பாம்பாறில் கலந்து, பின்னர் சாத்தனூர் அணைக்குச் சென்றடையும்.
இந்த ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்கள் தூர் வாரப்படாததால், மழைக் காலங்களில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது.
திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் இந்த ஏரி உள்ளது. எப்போதும் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், தினமும் இப்பகுதியை கடந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர் முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
அனந்தனேரியையொட்டி, மயானம் உள்ளது. ஏரி அருகே உள்ள ஈரப்பதத்தால், சடலங்களை புதைப்பதிலும், எரிப்பதிலும் மிகவும் சிரமத்துள்ளாகின்றனர். அதற்கென சுற்றுச்சுவர் அமைத்து தரக்கோரி, நீண்ட நாள் கோரிக்கை உள்ளது என்பது என்றனர். பாழாகிப்போன அனந்தனேரியை தூர்வாரி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டுநி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், மயானத்துக்கென தனி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.