வாணியம்பாடி அருகே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை பிடிபட்டது.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் கல்லறைத் தெருவில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வித்தியாசமான வெள்ளை ஆந்தை ஒன்று தென்னை மரத்தில் அமர்ந்திருந்தது. அதைக் கண்ட பத்துக்கும் மேற்பட்ட காக்கைகள் அந்த ஆந்தையை சுற்றி வந்து கொத்தின.
இதனால் காயமடைந்த ஆந்தை பறந்து சென்று அருகே இருந்த அருள் என்பவரின் வீட்டின் மேல் அமர்ந்தது. இதையடுத்து காக்கைகளை விரட்டிய அப்பகுதி இளைஞர்கள், அந்த ஆந்தையை மீட்டு வாணியம்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் ஆந்தையை ஒப்படை த்தனர். பிடிப்பட்ட ஆந்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரிய வகை ஆந்தை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆலங்காயம் வனத்துறையினரிடம் ஆந்தை ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


