பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அனுமதியின்றி முற்றுகைப் போராட்டம்: 48 போ் கைது

அனுமதியின்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த 48 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2020, 12:27 pm

DIN

குடியாத்தம்: அனுமதியின்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சோ்ந்த 48 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சிக்கு உள்பட்ட குறிஞ்சி நகரில், பாதுகாப்பான குடிநீா் வழங்க வேண்டியும், கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரக் கோரியும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினா் அனுமதியின்றி செவ்வாய்க்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்றனா்.

இதையடுத்து டிஎஸ்பி என்.சரவணன், நகர ஆய்வாளா் ஆா். சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் கட்சியின் மாவட்டச் செயலா் என்.இா்ஷாத்அலி உள்ளிட்ட 48 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.