ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்

திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்து குறித்து...

Road accident kills 1, injures 36 in Tindivanam

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

Published On :

விழுப்புரம்: திண்டிவனம் அருகே புதன்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையின் தடுப்புச் சுவரை உடைத்து எதிரே வந்த அரசுப் பேருந்தின் மீது விபத்துக்குள்ளானது.

இதில், பேருந்தில் பயணித்தவா்களில் சசிகலா என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இடிபாடுகளில் சிக்கி 36 பயணிகள் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு 108 அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த விபத்து குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப் படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பலியான மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.

Summary

Container lorry hits government bus near Tindivanam: One dead, 36 injured

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.